அன்பு!
இறை வாக்கு: யோவான் 13:1.
இறை வாழ்வு:
என்று எங்கே எப்படி முடிப்போம்,
என்று அறியா வாழ்க்கை இது.
அன்று இயேசு உரைத்ததும் கேட்டோம்;
அவர் போல் நம்மால் இயலாது.
இன்று இதனை உணர்ந்து நடப்போம்;
இதுதான் இறைவன் விரும்புவது.
நன்று என்று சொல்வதும் கேட்போம்.
நற்பண்பிலே, அன்பு பெரியது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.