அன்பு!
இறை வாக்கு: யோவான் 14: 23-25.
- இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
- என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
- நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
இறை வாழ்வு;
ஆட்டும் தலையால் ஆமென் என்பார்;
ஆயினும் அவரோ கீழ்ப்படியார்.
கேட்டும் நடவார் கிறித்தவர் என்பார்;
கிறித்து எப்படி வாழ்த்திடுவார்?
வாட்டும் துன்பம் போக்க நினைப்பார்,
வந்து கைகள் நீட்டுகிறார்.
ஓட்டும் இறையும் உள்ளில் வருவார்;
உணர்த்தி, அன்பு கூட்டுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.