அடித்துத் துப்பி அவமதித்தார்…

அடித்துத் துப்பி அவமதிப்பார்…
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
“ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ‘ யூதரின் அரசரே, வாழ்க! ‘ என்று சொல்லி ஏளனம் செய்தனர்; …

See More

அடித்துத் துப்பி அவமதிப்பார்...
நற்செய்தி: மத்தேயு 27:27-31.
படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்:
"ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, ' யூதரின் அரசரே, வாழ்க! ' என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்;அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்."

நல்வாழ்வு;
அடித்துத் துப்பி அவர் மகிழ்ந்தார்;
ஆடை உரிந்தும் அவமதித்தார்.
கடித்துக் குதறும் விலங்கு அவர்,
கனிவு இல்லாப் போர்வீரர்.

பிடித்துச் செல்லும் இம்மனிதர் 
பிறவாதிருப்பின் பேறடைவார்;
வெடித்துச் சிதறிய வாழ்வுற்றார்.
வேண்டாம் என்போர், கீழ்ப்படிவார்!
ஆமென்.

Leave a Reply