பாழாக்கும் அருவருப்பு!

பாழாக்கும் அருவருப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 13:14-16.
“நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.”
நற்செய்தி மலர்:
பாழாக்கும் அருவருப்பாய்,
பகைத் தலைவன் முன் நிற்க,
ஆழாக்கு உணவிற்காய்,
அடுப்படிக்குச் செல்லோமே!
கூழாக்கும் கன்மலையாய்,
கிறித்தரசர் பகையழிக்க,
வீழாத அடியவர்க்காய் ,
விருந்தளிப்பார், செல்வோமே!
ஆமென்.

Image may contain: sky and outdoor

ஊமை போன்றும் இருப்போம்!

ஊமை போன்றும் இருப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:9-11.
“நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.”
நற்செய்தி மலர்:
தீமை வெறுத்து, தெய்வம் தொழவே,
திருமறை வாக்கு மொழிகின்றோம்.
திறமையாளர் என்றவர் நினைத்துத்
தீங்கு செய்தும் பொழிகின்றோம்.
ஊமை போன்றும் இருக்கச் சொன்னீர்;
உம்சொற்படியே இருக்கின்றோம்;
உரைக்கும் ஆவியர் வாக்கை மட்டும்,
ஒலிக்க வாயைத் திறக்கின்றோம்!
ஆமென்.

Image may contain: one or more people and people sitting

Like

 

Like

 

Love

 

Haha

 

Wow

 

Sad

 

Angry

Comment

கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!

கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:7-8.
“போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.”
நற்செய்தி மலர்:
கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்;
கடவுளின் பிள்ளையே கலங்காதே.
விலகும் துன்பம், விடியும் இன்பம்,
வீணாய் அழுது குலுங்காதே.
நிலத்தில் நடுக்கம், நேர்வழி இடுக்கம்,
நெஞ்சம் தளர்ந்து தயங்காதே.
அலகை தொடங்கும் அவலம் முடியும்,
ஆண்டவரின்றி இயங்காதே!
ஆமென்.

Image may contain: one or more people and text

கிறித்துவின் பெயரில் அந்திக்கிறித்து !

கிறித்துவின் பெயரில் அந்திக்கிறித்து!
நற்செய்தி மாலை: மாற்கு13:5-6.
“அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: ‘ உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘ நானே அவர் ‘ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.”
நற்செய்தி மலர்:
கடைந்தெடுத்தக் கயவரைக்கூட
கடவுள் என்றே எழுதுகிறார்.
கடவுளின் மைந்தன் என்று சொன்னால்,
கண்டிப்பாகத் தொழுதிடுவார்!
அடைய இயலா மீட்புற்றோர்தான்,
ஆண்டவருக்குள் வாழுகிறார்.
அந்திக்கிறித்து யாரெனத் தெரிந்து,
அவரைக் கை கழுவிடுவார்!
ஆமென்.

Image may contain: text