அடுத்த முந்நூற்றைம்பது ஆண்டில்,

அரசர் என்பவர் இல்லா நாளில்,

தடுத்து ஆளும் இறையைப் பிரிந்தார்.

தமக்குச் சரியென்பதும் புரிந்தார்.

கெடுப்பதும் கெடுவதுமாகத் திரிந்தார்;

கேட்டின் வேரும் பாராதிருந்தார்.

இடுக்கணில் மட்டும் இறைவா என்றார்.

இழிநிலைக்கே இப்படிச் சென்றார்!

(நீதித் தலைவர்கள் (21:25)

May be an image of text that says 'In those days there was no king in Israel: every man did that which was right in his own . Judges S0 Judges-21:25 21:25'