காணா உண்மை!

காணா உண்மை!

இறை வாக்கு: யோவான் 14:17

  1. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

இறை வாழ்வு:

பிறரது கண்ணில் காணா உண்மை,
பிள்ளைகள் கண்டு அள்ளிடவே
இறைமகன் இரங்கி ஈந்த நன்மை,
இறையாவியார், என்றறிவீர்.
குறைமிகு வாழ்வு கூறா பொய்மை,
குற்றம் என்று தள்ளிடவே,
நிறைவழி நடத்தும் இந்த பண்பை,
நிரப்புவோர் யார்? இன்றறிவீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.