விண் வீடு!
இறை வாக்கு: யோவான் 14: 2.
- என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.
இறை வாழ்வு:
என் வீடு இங்கு நிலைத்தது இல்லை;
எனினும் இறையுடனே இருப்பேன்.
விண் வீடு மனிதர் செய்ததும் இல்லை;
விரும்பி ஈகிறார், பார்த்திருப்பேன்.
நன் வீடு புகு நாள் முன்னறிவில்லை;
நம்பிக்கையிலே நான் இருப்பேன்.
கண் மூடு காட்சி, கவலையும் இல்லை;
கடவுளின் பேறு, காத்திருப்பேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.