யோவான் 9:10-11.

அருட்பா: 


தெரியாதொருவர் என்னிடம் வந்து,

தெரியாக் கண்ணைத் திறந்தார்.  

பெரியாரவரிடம் பழகிடும் முன்பு,

பெருமை அற்றவர் பறந்தார்.

சரியாயிதனைப் புரிந்தவர் இன்று,

தற்புகழ் விட்டுச் சிறந்தார்.

அறியாதவரோ விளம்பரம் தந்து,

ஆண்டவர் வழியை மறந்தார்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.