வெறி!
நற்செய்தி: யோவான் 8:59.
நல்வழி:
வெறியால் அழியும் வீண் மனிதர்,
வெறுப்பில் இயேசுவை ஏற்காமல்,
எறிவார் கல்லை, கொல்வதற்கு.
எடுக்கும் இடமோ திருக்கோவில்.
நெறியால் வழியும் விண் மனிதர்,
நேரெதிர் வாக்கு கேட்டாலும்,
அறிவால் பொறுத்து அகன்றிடுவர்;
அவர் செல்லிடமே அருட்கோவில்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.