யோவான் 20:30-31.

சொன்னது கொஞ்சம்!

இறை மொழி: யோவான் 20:30-31.

30. இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

31. இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

இறை வழி:

சொல்லார் மிஞ்சும் நாட்டில்

சொன்னார் கொஞ்சம் ஏட்டில்.

நல்லார் நம்பியணைப்பார்.

நன்மைக்கிறை இணைப்பார்.

வல்லார் வகுத்தது அல்ல;

வாகைச் சூட்டிச் சொல்ல.

எல்லாம் மீட்பதே திட்டம்;

அன்புதான் இறைச்சட்டம்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Characteristics of a Genuine Belief John 20:30-31 "...these have been written so that you may believe..."'