யாருக்கு புகழ்ச்சி?

யாருக்கு புகழ்ச்சி?

இறை மொழி: யோவான் 17: 9-10.

9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.

10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.

இறை வழி:

பேருக்கு கிறித்தவர் என்று வாழும்

பெருமைக்குரிய நண்பர்களே,

யாருக்கு புகழ்ச்சி, யாருக்கு மாட்சி?

இறை முன் நின்று எண்ணுங்களே.

ஊருக்கு பெரியவர் என்று ஆளும்,

உங்கள் தற்புகழ் வாடிடுமே.

பாருக்கு நன்மை செய்பவர் இறைவன்;

பரன் அவர் பெருமை பாடிடுமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.