மாட்சிமை யாருக்கு?
இறை வாக்கு: யோவான் 14:12-14.
- மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
- நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
- என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
இறை வாழ்வு:
மாட்சிமை யாவும் இறைவனுக்கே;
மைந்தன் செயலும் உரைக்கிறதே.
ஆட்சி தனக்கென நினைக்கையிலே,
அமையாது இறை அருஞ்செயலே.
வீட்சியில் கிடக்கும் மானிடமே,
விரும்பிச் செல்வது யாரிடமே?
நீட்சியில் இறை புகழ் பாடுவதே
நேரென நெஞ்சும் கூறிடுதே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.