பொறுத்திடும் திருப்பணி!
இறை மொழி: யோவான் 20:21-23
21. இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
இறை வழி:
வெறுத்திடும் மனிதர் பெருத்திடும் போது
விண் மகன் ஊழியம் வழங்குகிறார்.
பொறுத்திடும் பண்பை வளர்த்திடும் தூது,
புனித ஆவியால் வழங்குகிறார்.
மறுத்திடும் பேச்சு சொல்பவர் வாது,
மறையும்படிக்கே வழங்குகிறார்.
திருந்திடுவோமெனில் தீமை வெல்லாது.
தெய்வப் பண்பே வழங்குகிறார்!
ஆமென்.