புவியோர் இல்லை!
இறை மொழி: யோவான் 17:14.
14 – நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
உண்மை சொன்னால், பொய்மை எதிர்க்கும்;
ஒவ்வொரு பேரும் அறிந்ததே.
நன்மை செய்தால், தீவினை மிதிக்கும்;
நன்றாய் நாமும் தெரிந்ததே.
அண்மை நிகழ்வுகள் ஆயிரம் சொல்லும்;
ஆண்டவர் முதலில் சொன்னதே.
எண்ணிப் பார்த்து இறை பின் செல்லும்;
இவ்வழி இப்புவி வென்றதே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.