புரியவில்லையா?

புரியவில்லையா?

இறை வாக்கு: யோவான் 13: 6-7.

  1. அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
  2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

இறை வாழ்வு:

எத்தனை எத்தனையோ நிகழ்வுகள்;
ஏன் வந்தன என அறியாதவைகள்.
அத்தனை அறிவையும் பெற்றவர்கள்,
யாரிங்கு உண்டு, சொல்லுங்கள்.
பித்தனைப் போன்று அலைபவர்கள்,
பிறகு யாரிடம் பெறுவார்கள்?
நித்தம் நடத்துவாரைப் பாருங்கள்.
நேர்மை, அதனுள் செல்லுங்கள்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.