நல் நம்பிக்கை!

நம்பிக்கை!

இறை மொழி: யோவான் 20:29.

29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

இறை வழி:

பண்டு தொடங்கிப் பார்க்கிறார் மனிதர்;

பார்க்கும் முன்னே ஏற்கிறார் புனிதர்.

கொண்டு தருவதை வாங்குவார் மனிதர்;

கொள்ளும் முன்னே தாங்குவார் புனிதர்.

உண்டு களித்துப் புகழ்கிறார் மனிதர்;

ஊருக்கிறைத்துத் திகழ்கிறார் புனிதர்.

கண்டு நம்பாதும் ஓட்டுவார் மனிதர்;

காணாயிறையைக் காட்டினால் புனிதர்!

ஆமென்.

May be an image of text that says '"Blessed are those who have not seen and yet have believed." John 20:29, NIV'