தெய்வமே வருக! தூய்மை தருக!

தெய்வமே வருக! தூய்மை தருக!

தொலைவு தொலைவு தூய்மை தொலைவு. 

தொங்கும் வாழ்வில் தூய்மை  தொலைவு.

மலிவு மலிவு கயமை மலிவு;

மண்ணில் எங்கும் கயமை மலிவு. 

விளைவு விளைவு விரும்பா  விளைவு;

விதைகள் காடாய் மாறும் விளைவு.

நுழைவு நுழைவு இறையின் நுழைவு;

நெஞ்சம் தேடும் தூய்மை நுழைவு!

-கெர்சோம் செல்லையா.