தூய ஆவியார்!

உண்மை என்னும் தேற்றரவாளன்!

இறைவாக்கு: யோவான் 14:16.

  1. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

இறை வாழ்வு:

உண்மை என்னும் தேற்றரவாளன்,
உடன் இருக்கச் சவலையில்லை.
கண்மை இட்டு கலையென்றாக்கும்,
கயமை வரினும் கவலையில்லை.
தொன்மை நாளில் வந்தும் சென்ற,
தூய பணியாள் போன்றில்லை.
என்னாளாயினும் என்னுள் வாழும்,
இவர்போல் வேறு சான்றில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.