விடேன்!
இறை வாக்கு: யோவான் 14;18.
- நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
இறை வாழ்வு:
விட்டு விட்டுச் செல்வதற்கு,
விருந்தாளியும் இல்லை.
கட்டியிட்டுப் போவதற்கு,
களவாணியும் இல்லை.
ஒட்டியொட்டி உள்ளிணைத்து,
உயிர் காப்பதே உண்டு.
கெட்டுப் போகாது வாழ்வு;
கிறித்து உடன் உண்டு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.