கேட்டின் மகன்!

  1. கேட்டின் மகன்!
  2. இறை மொழி: யோவான் 17: 12.

கேட்டின் மகன்!

இறை மொழி: யோவான் 17: 12.

12. நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

இறை வழி:

கேட்டைச் செய்வோர் யாரெனப் பார்த்தேன்.

கெடுமதி அலகையின் மக்களே.

கோட்டை கட்டி, கோனாய் வரினும்,

குழப்பும் அறிவிலா மாக்களே.

நாட்டின் தலைவர் வரிசையும் பார்த்தேன்,

நன்மைக்கென்றவர் பக்கமே.

ஏட்டில் எழுத இயலா வஞ்சம்,

இருக்கும் கடல் பாக்கமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.