இயேசுவின் குரல்!
இறை மொழி: யோவான் 20:16.
16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
காணாக் கண்கள் கலங்கும் நேரம்,
கடவுட் குரலொலி கேட்கிறது.
வீணாய்ப் போன விளிம்பின் ஓரம்
விரைந்து மானிடம் மீட்கிறது.
ஏனோ தானோ என்பவர் வீரம்
இறையொலி முன்னர் வீழ்கிறது.
நானே தந்தேன் என்றே கூறும்
நல் நம்பிக்கை வாழ்கிறது!
ஆமென்.
