ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்!
நற்செய்தி: யோவான் 9: 4-5.
5. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
நல்வழி:
ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்,
உண்டு நமக்கும் இருட்காலம்.
சாய்ந்து ஒதுங்கும் செங்கதிரும்,
சவப்பெட்டிக்குள் அடங்கிவிடும்.
ஆய்ந்து பார்ப்போம் எதிர் காலம்;
ஆண்டவர் திறக்கும் புதிர் காலம்.
பாய்ந்து பரவும் இறையொளியும்;
பார்க்க, நாமும் தெளிவாவோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.