ஒன்றாயிருப்போம்!
இறை மொழி: யோவான் 17:11.
இறை வழி:
தந்தையும் மைந்தனும் ஒன்றாய் இருந்து
தரணியை ஆள்வது போன்று,
மைந்தர்கள் என்கிற அடியவர் சேர்ந்து,
மாண்பாய்த் தொழுவது சான்று.
முந்தையர் செய்த வன்முறை வெறுத்து,
முதலில் அன்பைப் பெற்று,
மந்தையைக் காக்க ஒன்றாய் நிறுத்து;
மாற்றும் இறை கூற்று!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.