எட்டு நாட்களுக்குப் பின்
இறை மொழி: யோவான் 20:26-28.
26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
இறை வழி:
எட்டு நாள் வரை விட்டுக் கொடுத்து,
இறை மகன் காட்சி கொடுக்கிறார்.
கெட்டு, இழந்து போதல் தடுத்து
கிறித்து அடியரை அடுக்கிறார்.
மட்டு தொடாத மகிழ்ச்சியில் அடியர்
மயக்கம் தெளியக் களிக்கிறார்.
கட்டு படுத்தாப் பற்றில் துடியர்,
கடவுளே என்று விளிக்கிறார்!
ஆமென்.