இழுக்கும் இறை!

இழுக்கும் இறைவன்!
நற்செய்தி: யோவான் 6:43-44.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
நல்வழி:
தந்தை இழுக்க, மைந்தன் அழைப்பார்.
தாவி அணைக்கும் ஆவியர் உழைப்பார்.
விந்தை அரசுள் வேந்தன் நுழைப்பார்.
விடுதலையாளர் கண் விழிப்பார்.
நிந்தை நீக்கும் இறைமகன் வருவார்.
நேர்மைக்குரிய பரிசைத் தருவார்.
எந்தை தாயும் உறவும் பெறுவார்.
இறையருளாளர் இன்பமுறுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.