இறை வாக்கும் இறையன்பும்!
இறை வாக்கு: யோவான் 13:34-35.
- நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
- நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
இறையன்பு:
இறையடியானெனச் சொல்கிற என்னில்
இறை அன்புண்டோ, அளக்கிறேன்.
குறை நிறைவாக அளக்கும் முன்னில்,
கொடுமை செய்து பிளக்கிறேன்.
உறையிலொளிக்கும் கத்தியை உருக்கும்;
உள்ளன்பில்லை, வெறுக்கிறேன்.
அறைய வேண்டாம், அன்பைப் பெருக்கும்;
அழிக்கும் வெறுப்பை நொறுக்கிறேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.