இறை நோக்கு!

இறை நோக்கு!

இறை மொழி: யோவான் 17:4-5.

இறை வழி: 


நோக்கம் உண்டு தெய்வப் படைப்பில்;

நோக்கி நம்மைக் கொடுப்போமா?

ஆக்கம் கண்டு, அன்பை விதைப்பின், 

அறுவடை மேன்மை, எடுப்போமா? 

வீக்கம் கொண்ட வீண் விருப்பில்,

விளைவது தீமை, நினைப்போமா?

போக்கை மாற்றும்; புனிதனை நாடும்;

புகழ்ச்சி தருவார், அணைப்போமா?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.