இறைப்பற்று என்றால் என்ன?
உண்மை என்பது இறை பண்பாகும்.
உள்ளில் உண்மை பிறக்கட்டும்.
நன்மை செய்தல் வெளிப்பாடாகும்.
நமது வாழ்க்கை உரைக்கட்டும்.
வன்மக் கொடுமை யார் பண்பாகும்?
வருத்தும் அலகை இறக்கட்டும்.
இன்னல் நீக்கி எளியருக்கிரங்கும்.
இறைப் பற்று சிறக்கட்டும்!
-கெர்சோம் செல்லையா.