இரப்பதை நிறுத்து!

திருச்செய்தி: யோவான் 9:8-9.

அருட்பாடல்:


இல்லை கண்கள், இதனால் இரந்தான். 

இயேசு தரவே, இரத்தலைத் துறந்தான். 

சொல்லை விரும்பிப் பிறர்க்குரைப்பான்,

சொல்லிற் கெதிராய் எப்படி இரப்பான்? 

பிள்ளை என்பவன் பிறரிடம் இரந்தால்,

பெற்ற தந்தை இல்லான் அன்றோ?

நல்ல திருப்பணி செய்பவன் என்றால்,

நம்பாதிருப்பதும் இரப்பதும் நன்றோ? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.