இயேசுவை நம்புவீர்!

இயேசுவை நம்புவீர்!

இறை மொழி: யோவான் 17:6-8. 

இறை வழி: 


தந்தை அறிந்த தம் மக்கட்கு,

தனையன் வாக்கு வழங்கினார். 

மைந்தன் தூதை அடியவர் ஏற்று,

மாட்சி உற்று விளங்கினார். 

விந்தை வாழ்வு வேண்டும் நமக்கு,

விருந்தாய் இன்றும் முழங்குவார். 

இந்தப் பேற்றால் தூய்மை பெற்று,

யார் யார் ஒளிபோல் துலங்குவார்?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.