இயேசு அரசன்!
இறை மொழி: யோவான் 19: 19-20.
19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
இறை வழி:
எவ்வளவு முயன்று கெடுத்தாலும்
உண்மை ஒருநாள் வெளிப்படும்.
இவ்வளவு நிந்தை கொடுத்தாலும்,
இயேசுவே அரசன், எழுதப்படும்.
அவ்வளவு அறிவைப் பெற்றிருந்தும்,
அது புரியாமல் போனதே!
செவ்வளவு நேர்மை கற்றிடுவோம்;
செய்யும் இறையால் ஆனதே!
ஆமென்.