இயேசுவின் இறைவேண்டல்!

இயேசுவின் இறைவேண்டல்!

இறைமொழி:

யோவான் 17: 1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2. பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இறைவழி:

வேண்டல் செய்யும் இறைமகன் பாரீர்.

விண்ணப்பங்கள் எவை எனப் பாரீர்.

ஆண்டவர் அளிக்கும் வாழ்வும் பாரீர்.

அதற்குக் கூறும் வழியும் பாரீர்.

நீண்ட நெடிய வேண்டலைப் பாரீர்.

நிலையற்றோர்க்கே, என்றும் பாரீர்.

மாண்டல் அல்ல, மாட்சிமை பாரீர்;

மன்னனோடு வாழ்வோம், வாரீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

No photo description available.