அன்பின் சட்டம்

அன்பின் சட்டம்!

இறை வாக்கு: யோவான் 14:15.

  1. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.இறைவாழ்வு:

இறை வாழ்வு:

இழுக்கும் அன்பில் இணைந்து நின்று,
இதுவே சட்டம் என்னாமல்,
முழுக்கும், விருந்தும் போதும் என்று,
மூடர் போன்று செல்லாதீர்.
அழுக்கும் கறையும் அகலக் கண்டு,
அன்பில் வாழ எண்ணாமல்,
புழுக்கும் புண்ணை வைத்துக் கொண்டு,
புனிதம் என்று சொல்லாதீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.