இயலும் என்று நம்பாமல்…

இயலும் என்று நம்பாமல்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:20-24.
” அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ‘ இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று? ‘ என்று கேட்டார். அதற்கு அவர், ‘ குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும் ‘ என்றார். இயேசு அவரை நோக்கி, ‘ இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் ‘ என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ‘ நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும் ‘ என்று கதறினார்.”

நற்செய்தி மலர்:
இயலும் என்ற நம்பிக்கை
இயேசுவில் வந்தால், பற்றாகும்.
முயலும் பார்ப்போம், என்பதுவோ
முற்றிலும் நம்பாக் கூற்றாகும்.
செயலில் விருப்பைக் காண்பதற்குச்
சிறிய குழந்தை போல் கேளும்.
வயலும் ஒருநாள் வாழ்வு தரும்;
வந்து நம்பி நிலத்தை உழும்!
ஆமென்,

Leave a Reply