வன்முறை!

எல்லா அரசுத் துறைகளில் காணும் அடிப்படைத் தவறுகள்தான் காவல்துறையிலும் காணப்படுகின்றன. தவற்றின் தொடக்கத்தைப் பணியாளர் தேர்வில் பார்க்கிறோம். திறன் பார்த்து நேர்மையாய்த் தேர்வு செய்தால், திறமையான பணியாளர்கள் நேர்மையாய்ப் பணியாற்றுவார்கள். அது ஒரு கனாக் காலமாயிற்று!
யாரை எங்கே பணியமர்த்தினால் அமைதி நிலவும் எனத்தெரிந்து, முன்பு பணியமர்த்தினார்கள். இன்று, ஆளுங்கட்சி அரசியலுக்கு, அடிபணிந்து நடப்பவர்கள், சாதிக்காரர்கள், காசு கொடுத்து இடமாற்றம் பெறுபவர்கள் என்று பணி நியமனங்கள் இருப்பதால், சட்டம் ஒழுங்கு எல்லாம் கானல் நீராயிற்று.

சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடித்துச் சட்டத்தின் முன்பு நிறுத்தவும், வன்முறை ஓன்றுதான் வழியென்று நாமும் நமது காவல்துறையும் நினைப்பது பெருந்தீங்காயிற்று.

அடி, உதை, சித்திரவதை, கொலை என்றில்லாமல், குற்றந்தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் இயலும். ஆனால் முயலவில்லை!

குற்றம் புரியாத ஒருவரை, குற்றவாளியாய்க் கொண்டுவந்து அடைப்பது, கொடுமையிலும் கொடுமையென்று, இப்போதாவது நாம் உணரத் தொடங்கலாமே!

Leave a Reply