பரிவின் பார்வை!

பரிவின் பார்வை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39.
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,
38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

கிறித்துவில் வாழ்வு:
கண்ணில் காணும் இழிவு நீங்க,
கடிந்து கொண்டால் சென்றிடுமோ?.
புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால்,
புரையோடிடுதல் குன்றிடுமோ?
பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க,
பரிந்து அணைத்தால் நின்றிடுமே.
எண்ணை மருந்தாய் நாமிருப்போம்;
இயேசு வழியில் வென்றிடுமே!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply