பசியாற்றுபவர் எங்குள்ளார்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 4:1-2
1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
கிறித்துவில் வாழ்வு:
பசியில் வதங்கும் ஏழைக்கு,
பார்க்கும் ஆட்சியர் என்செய்தார்?
கசியும் நீரைப் பெறுவதற்குக்
கால் கடுக்க வைத்துள்ளார்.
ருசியாய் உணவு உண்பவர்க்கு,
பசியின் கொடுமை உரைப்பவர் யார்?
புசியும் நண்பா, என்றழைத்துப்
பசியாற்றுபவர் எங்குள்ளார்?
ஆமென்.