கொடுமை!

கொடுமை!  


கிறித்துவின் வாக்கு: லூக்கா 23: 32-33.  

குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

33  கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

குற்ற மற்ற ஒருவரைக் கொல்லல்,

குறையுள்ள அமைப்பின் கொடுமை.  

மற்ற குற்றவாளியோடறைதல்,  

மனிதர் நிகழ்த்தும் கொடுமை.  

பெற்ற தீங்கை நமக்கென ஏற்றும்,  

பேரருள் மறுத்தல் கொடுமை.  

நற்றமிழ் வாக்கில் நாமின்று கேட்டும்,    

நன்றி மறப்பின் கொடுங்கொடுமை!  

ஆமென்.

Leave a Reply