காத்திருப்போம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 24:49.
கிறித்துவில் வாழ்வு:
பணியொன்றைத் தொடங்கும் நாம்,
பல்வகை அறிவு நாடுதல் போல்,
அணி சூட்டும் இறைப்பணியில்
ஆவியின் அருளைப் பார்த்திருப்போம்.
பிணி நீக்கும் திருப்பணியில்,
பிழைகள் வராமல் இருப்பதற்கு,
துணிவை நாம் கேட்டிடுவோம்;
தூயன் காலடி காத்திருப்போம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.