காட்டு வெள்ளம் கற்பித்தாலும்!
தீட்டு என்று தள்ளப்பட்டோர்,
தெய்வம் போன்று ஆகின்றார்.
ஆட்டுவிக்கும் சாதி வெறியர்,
அறிவை இழந்து சாகின்றார்.
காட்டு வெள்ளம் கற்பித்தாலும்,
கற்கவில்லை, வெறி நெஞ்சம்.
கூட்டு வாழ்க்கை, கோடி இன்பம்.
கொடியோருக்கு, இறை கெஞ்சும்!
– கெர்சோம் செல்லையா.