காசு காசு….

காசு காசு….
 
நற்செய்தி மாலை: மாற்கு 6:35-37.
“இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, ‘ இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் ‘ என்றனர். அவர் அவர்களிடம், ‘நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்’ என்று பதிலளித்தார். அவர்கள், ‘நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?’ என்று கேட்டார்கள்.”
நற்செய்தி மலர்:
காசு கேட்டு, வாங்கி எடுத்துக்
கணக்கின்றிச் செலவிட, கட்டளையோ?
தூசு என்று, எளியரை நினைத்துத்
துட்டால் வாங்கிட, முட்டாளோ?
ஆசு தேடியும் கிடைக்கா இறையின்
அற்புதச் செயல்தான் ஊழியமே!
ஏசுபவர்கள் இன்றும் காண்பார்;
இயேசுதான் நம் வழியுமே!
ஆமென்.
நற்செய்தி மாலை's photo.

Leave a Reply