எங்கும் சொல்வோம்!

எங்கும் சொல்வோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:42-44.
42 உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
பொங்கும் அருளைப் பெற்றவரே,
புனிதர் ஊழியம் பார்ப்பீரே.
எங்கும் சென்று இறையரசை
இயம்பி, மீட்பில் சேர்ப்பீரே.
அங்கும் இங்கும் அமராமல்,
ஆண்டவர் வழியில் செல்வீரே.
தங்கும் ஆவியர் துணையிருப்பார்;
தரணி முழுவதும் சொல்வீரே!
ஆமென்.

Image may contain: ocean, text, outdoor and nature
LikeShow More Reactions

Comment

Leave a Reply