ஊசிக் காதில் நுழைவதற்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:24-25.
24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓடிக் குதிக்கும் ஒட்டகம் ஓன்று,
ஊசிக் காதில் நுழைவதற்கு,
பாடிக் கொண்டு வந்தது கண்டு,
பார்த்தோர் வியந்து நின்றாராம்.
தேடிச் சேர்த்த செல்வம் கொண்டு,
தெய்வ அரசைப் பிடிப்பதற்கு,
கோடிக் கணக்கில் மக்கள் உண்டு.
கிறித்தோ முடியாதென்றாராம்!
ஆமென்.