வேறு சொந்தமில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 20:34-36.
34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
35 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
எப்படி உயிர்ப்பில் இருப்போமென்று,
எண்ணிப் பார்த்தால் மகிழ்வீரே.
அப்படி நாமும் அவருடன் இணைவது,
ஆண்டவர் அருளெனப் புகழ்வீரே.
இப்படி எழும்பும் புதுவாழ்வுள்ளே,
எடுத்தலும் கொடுத்தலும் பண்ணாரே.
சொற்படி நாமவர் மக்களாவதால்,
சொந்தம் வேறு எண்ணாரே!
ஆமென்.