இறை தொழுதல்!
விதி என்றிறையை, வணங்கல் உண்டு.
வினை ஒழியென்று, இணங்கலுமுண்டு.
மதி எங்கென்று, பிணங்கல் உண்டு.
மத வெறிகொண்டு, சுணங்கலுமுண்டு.
சதி பகை விட்டு, எழுதல் உண்டோ?
சமமாய்க் கருதும், தழுவலுமுண்டோ?
கதியே இறையென விழுதல் உண்டோ?
கண்ணீரகற்றும் தொழுதலுமுண்டோ?
-கெர்சோம் செல்லையா.