|
|
|
அரபு மொழியிலே யோபு என்றால் பொருள், மனந்திரும்புதல். தன்
நீதியில் உயர்ந்து நின்ற யோபு, தலைவனாம் இறைவனின் நீதியின் முன்பு, தான் ஒன்றுமில்லையென்பதை,
தனது தாழ்நிலையில் கற்றதை விளக்கும் நூல், யோபு, எபிரேய இலக்கியத்தில் இந்நிலை முதன்மையானது
என்றும் எண்ணுவாருண்டு. ஆபிரகாம் காலத்து ஆசாரிய ஊழியம் போன்ற யோபு வின் ‘குடும்ப குருத்துவம்’
(யோபு 1:5) காணப்படுவதால், யோபுவும் ஆபிரகாமின் நாளைச் சார்ந்தவர் என்கிறார்கள். ‘நெறி
தவறா நீதி மான்களைத் துன்பம் நெருக்கிடுவது ஏன்?’ எனும் கேள்விக்கு விடை தேடும் இந்நூலில்,
நிலையற்ற வாழ்க்கையைக் குறித்து நிறையவே சொற்றொடர்களைக் காண்கிறோம். குறையாது கற்க,
குறிப்பிட்ட வாக்கியங்களைக் குறித்துக் தருகின்றேன்.
‘பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன்
நாட்களைப்போல் இருக்கிறதல்லலோ? (யோபு 7:1)
‘என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல்
முடிந்துப்போகும்.’ (யோபு 7:6)
‘நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின் மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
(யோபு 8:9)
‘என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல்
பறந்துபோகும். அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப் போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்
போலவும் கடந்து போகிறது’ (யோபு 9:25,26)
‘என் நாட்கள் கொஞ்சாமல்லவோ?’ (யோபு 10:20)
‘ஸ்திரியினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
அவன் பூவைப்போல்ப் பூத்து அறுப்புண்கிறான்;நிழலைப்போல நிலை நிற்காமல் ஓடிப்போகிறான்.’
(யோபு 14:1,2)
‘அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கிப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின்
தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்து போகக்கவுடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
அவன் ஒரு கூலிக்காரனைப் போல் தன் நாளின் வேலையாயிற்று என்றுரம்மயப்படுமட்டும் அவன்
ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை
விட்டு விலக்கும்.’ (யோபு 14:5,6)
‘சர்வ வல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த
நாட்களை அறியாதிருக்கிதென்ன?’ (யோபு 24:1)
‘என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப் போல் கடந்து போயிற்று.’ (யோபு 30:15)
இப்படிக் குறுகிய நாட்களைக் கொண்ட மனிதனின் காலம், இறந்த – நிகழ் - எதிர் காலமாயிற்று,
எனில், காலங்களையும் நேரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரோ, நேற்றும் இன்றும்
என்றும் மாறாதவராய் ஓரே காலத்திற்குரியவராய் இருக்கிறார். (எபி. 13:8)
எனவே தான் வாழ்த்துப்பாடல்
இப்படியாய்ச் சொல்கிறது: ‘நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்து போவதிவல்லை.’
(சங்கீதம் 102:27). எபிரெயருக்கு எழுதியவரும் இதை ஏற்றுக்கொண்டவராய்க் கூறுகிறார்:
‘கர்த்தாவே,
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;; வானங்கள் உம்முடைய கரத்தின்
கிரியைகளாயிருக்கிறது; அவைகள் அழிந்துபோகும் நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்
போலப் பழையமையாய்ப்போம்; ஒரு சால்வைப்போல அவைகளைச் சுருட்டுவீர்,
அப்பொழுது மாறிப்போம்;
நீரோ மாறாதவராயிருக்கீறீர் உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.’ (எபிரெயர் 1:10 –
12) நமது வாழ்க்கையில் எத்தனை ஆண்டுகள் முடிந்து போயின? நமது ஆண்டவரின் ஆண்டுகளோ முடியவில்லாதவைகள்!
நாம் நிலையற்றவர்கள்; நமது இறைவனோ நிலைத்தவர்! நாம் இன்று தோன்றி இன்றேயழியும்
பூவிற்கும், புல்லிற்கும் ஒத்தவர்கள். நமது கர்த்தரோ என்றும் இருப்பவர்! நமது வாழ்க்கைக்
குறுகியது; நமது கடவுளோ பெருவாழ்வுடையவர்! நிலையற்ற மனிதர்களே, நீங்கள் இதை உணர்ந்து,
நிலைத்த இறைவன் முன் மண்டியிடுங்கள். நமது நிலையறிந்து, நம்மை உண்டாக்கியவர் நிலையையும்
உணர்ந்து, நம்மைத் தாழ்துதலே நல்லறிவாகும்.
இருவர் நிலைகள் இப்படியிருக்க, இறைவன் மனிதனை ஏன் நிவையில்லாதவனாய்ப் படைக்க வேண்டும்
எனும் கேள்வியும் எழுகின்றது. எஸ்ராகியனாகிய ஏத்தானின் வினாவை, இன்றும் ஏராளமான பேர்
கேட்கின்றனர். ‘என் ஜுவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும் மனுபுத்திரர் யாவரையும்
வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?’ (சங்கீதம் 89:47). எந்நாளும் வாழும் இறைவனின் ஆடல்
அரங்கில், இமைப்பொழுது தோன்றி மறையும் ஏழைக் கூத்தாடியாய் மனிதன் காணப்படவேண்டுமா?
திரு மறையின் ஒரு பகுதியை மட்டும் பார்த்து மனிதர் கேட்கும் கேள்விகள் இவை. ஒருபக்கம்
சுடப்ப்ட தோசையும், அப்பமும் உண்பதற்கு ஏற்றதல்லவே! இருபக்கமும் பார்த்து இறைஞானம்
பெற இனி தொடரவோமா?
ஆண்டவர் இயேசுவிற்கு அன்பாயிருந்து அடியார் யோவான் நான்காவது நற்செய்தி நூலை நல்கும்
போது, அந்நூலை எழுதிடும் ஏதுவை இறுதியில் கூறுகிறார்: ‘இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து
என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய
ஜுவனை அடையும் படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.’ (யோவான் 20:31). இது போன்றே,
கடிதம் எழுதக் காரணம் சொல்கின்ற வேளையிலும் இறைவன் தரும் இறவாப் பெருவார்;வை எடுத்துச்
சொல்கிறார். ‘உங்களுக்கு நித்திய ஜுவன் உண்டென்று நீங்கள் அறியவும், தெவகுமாரனுடைய
நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற
உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.’ (1 யோவான் 5:13). திருமறையைத் தெளிவாகக் கற்போமேயெனில்.
திருமறை உரைக்கும் இறவாப் பெருவாழ்வெனும், நித்திய ஜீவனுக்கு. நீங்களும் நானும் சொந்தக்காரர்கள்
என்பதை நினைவில் கொண்டிருப்போம். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த
ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது. ( 1 யோவான்:5:18 ) திருமறை திட்டவட்டமாக சொல்லும்
திருச்செய்தி இது குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன்
இல்லாதவன் (1 யோவான் 5:12). இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிற எல்லோரும் இலவசமாய் இறையருளால்
இறவாப் பெருவாழ்வைப் பெறுகிறார்கள். உங்கள் உள்ளத்தில் இயேசுவிற்கு இடமிருப்பின் உங்களுக்கும்
இறவாப் பெருவாழ்வு உண்டு. உங்களால் இயேசு புறக்கணிக்கப்படுபவராய் இருப்பாரேயாகில்,
நீங்கள் புறக்கணிப்பது உங்களின் பேரின்ப வாழ்வு என்பதை மறக்கவேண்டாம் நீங்களும் நானும்
நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவே இயேசு இறந்தார். அவர் சாவால் நமக்கு வாழ்வு வந்தது
அவரை வெறுத்தல் அழிவைப் பெறுத்தல் அவருக்குள் வருதல் வாழ்வை தொடங்குதல் என் ஜீவன் நிலையற்றது
என்று ஏத்தானுடன் இணைந்து புலம்புவதை இனி நிறுத்துங்கள். இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இறவா பெருவாழ்வை இலவசமாய்ப்பெறுங்கள். இறையருள் இறவாப் பெரவாழ்வாய் இதை வாசிப்போருடன்
இருப்பதாக, ஆமென்.
|
|
|