எண்ணப் பேய் விரட்டல்!

எண்ணப் பேய் விரட்டல்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:9-10.

“அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் “இலேகியோன் “, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.”

நற்செய்தி மலர்:

ஒன்றல்ல, நம்மைப் பிடித்த

எண்ணப் பேய்கள், ஒன்றல்ல.

என்றல்ல, என்றே உரைத்து

இழந்தோர் புகழ்தல், என்றல்ல.

நன்றல்ல, பேய்கள் பின்னால்

நாமும் செல்லல், நன்றல்ல.

இன்றல்ல, இப்படி நாளும்

எதிர்ப்போம் தீமை, இன்றல்ல!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பசாசும் பேசுகிறது!

பசாசும் பேசுகிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 5:6-8.

“அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார்.”

நற்செய்தி மலர்:

யார் இவர் என்று இயேசுவைப் பார்த்து,

ஏளனமாகக் கேட்பவரே,

பார் இவர், இறையின் மைந்தன் என்று,

பசாசு உரைப்பதும் கேட்பீரே.

மார் நிறை பற்று கொள்ளும்போது

மாற்றான் கூற்று தேவையில்லை.

நீர் இதையறிந்து, நேர்வழி வந்தால்,

நிம்மதிக்கென்றும் குறையுமில்லை!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:1-5.

“அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.”

நற்செய்தி மலர்:

கட்டிப் போட்டாலும் உதறுகின்றார்;

கல்லறை வீடாக்கிக் கதறுகின்றார்.

கெட்டுப் போனவராய்க் குதறுகின்றார்;

கீழ்மக்கள் என்றாகிப் பதறுகின்றார்.

விட்டுச் செல்லாதீர், இவர்களைத்தான்;

வேண்டும் கிறித்துவிற்கு, திருந்தத்தான்.

எட்டுத் திசைகளிலும் புகழைத்தான்,

இவர்களும் உரைப்பார், இயேசுவில்தான்!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.
  • Comments
  • நற்செய்தி மாலை

    Write a comment…

தாங்கும் இறைவன்!


​படைத்தவர் நம்முடன் வருவது பாரீர்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:40-41.

“பின் அவர் அவர்களை நோக்கி, ‘ ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா? ‘ என்று கேட்டார்.41 அவர்கள் பேரச்சம் கொண்டு, ‘ காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ! ‘ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் அமிழும் சூழல்;
ஆயினும் இயேசுவின் அருள் நம்முள்ளில்.
பாழ் பட்டோம் எனப்பதறாதீர்.
படைத்தவர் நம்முடன் இருப்பது பாரீர்!
வாழ்விழந்தோர் என்றவர் இன்று,
வாழும் உயர்நிலை கண்டு அறிவீர்.
தாழ்விடத்தில் விழுந்த இவனும்,
தாங்கும் இறையால் எழுந்ததைத் தெரிவீர்!
ஆமென். 

விடுதலை நாள் வாழ்த்துகள்!

விடுதலை நாள் வாழ்த்துகள்!

விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம், குடியை விட்டிடுவோம்.
கெடுதலைக் கொணரும் வெறியத்தைக்
கீழே ஊற்றிக் கொட்டிடுவோம்.

எடுத்துரைக்கும் இவனுந்தான்,
என்றோ ஒருநாள் விட்டதினால்,
கொடுத்து உயர வளர்ந்திட்டான்;
குடும்பத்தோடு மகிழ்ந்திட்டான்.
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!

அடுத்து நிற்கும் குழந்தைகளின்
அழகிய முகத்தைக் கண்பாரும்.
படுத்து புரள்வதை விட்டுவிட்டு,
பாரதம் எழும்ப நீர் வாரும்!
விடுதலை என்று முழங்கிடுவோம்;
வேண்டாம் குடியை விட்டிடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

அனைத்துமே கீழடங்கும்!


​அனைத்துமே கீழடங்கும்!

நற்செய்தி மாலை: மாற்கு 4:39

“அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, ‘ இரையாதே, அமைதியாயிரு ‘ என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.”
நற்செய்தி மலர்:
காற்றடங்கும், கடலடங்கும்,
கடும் புயலும் வலுவடங்கும்,
நேற்று நம்மைத் தூற்றியவர்
நெய்த பழிச் சொல்லடங்கும்.
ஏற்றமிகு இறைமகனார்
இயம்புகின்ற வாக்கின் முன்,
ஆற்று வெள்ளம் ஓடுதல் போல்,
அனைத்துமே கீழடங்கும்!
ஆமென்.

அன்பே சட்டமாகட்டும்!

அன்பே சட்டமாகட்டும்!
உயிருக்கென்று உயிரை எடுக்கும்,
ஓட்டைச் சட்டம் ஒழியட்டும்.
கயிறை இன்று கழற்றி விடுக்கும்,
கனிந்த அன்பே வழியட்டும்.
பயிராய் நெஞ்சில் பண்பை வளர்க்கும்
பயின்றோர் வாக்கு ஆளட்டும்.
அயராதுழைப்போம், அன்பே வாழும்;
அதுவே, சட்டம் ஆகட்டும்!
-கெர்சோம் செல்லையா.

அலறிட வேண்டாம்!

அலறிட வேண்டாம்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:35-38.
“அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, ‘ அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள் ‘ என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது.அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், ‘ போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா? ‘ என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.”
நற்செய்தி மலர்:
இயற்கை விதியும்,
இறையைக் கேட்கும்.
செயற்கைச் சதியும்,
சொல்லால் அடங்கும்.
அயர்ந்தார் என்று,
அலறுதல் வேண்டாம்.
பயனைப் பெறுவோம்,
பற்றைக் கொண்டாம்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

அப்துல் கலாம்

அப்துல் கலாம்!
இப்படியும் ஒருவர்
இந்தியனாய் வாழ்ந்தார்.
அப்படியே தமிழர்,
அறிவாலே வாழ்வார்!
எப்படித்தான் இயலும்
என்றின்று கேட்போரே,
அப்துலைப் பாருங்கள்;
ஆண்டவர் அருள்வார்!
-கெர்சோம் செல்லையா.

வரமருளும்!

வரமருளும்!
நற்செய்தி மாலை: மாற்கு 4:33-34.
“அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தன்னிலை அறியா மனிதருக்குத் 
தவற்றை உணர்த்தும் வாக்கருளும்.
அன்னியர் என்று அகலாது,
அன்புடன் அணைக்கும் நாக்கருளும்.
என்னிலை யுற்றோர் என்றறிந்து,
எடுத்துச் சொல்லும் திறனருளும்.
முன்னிலே காணும் எளியருக்கு,
முதலில் உதவிட வரமருளும்!
ஆமென்.