அழித்தல் அறிவா? ஆக்குதல் அறிவா?

அழித்தல் அறிவா? ஆக்குதல் அறிவா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:8-11.
8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,
10 அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறிவும், திறனும், ஆற்றலும் எதற்கு?
அடுத்தவர் குடும்பம் கெடுப்பதற்கா?
வறுமை, கொடுமை பிடியிலிருந்து
வராது ஏழையைத் தடுப்பதற்கா?
முறிவைக் கட்டும் மருத்துவரையும்
முட்டாள் என்னும் உலகம் இது.
புரிவோம் உண்மை, போதும் தீமை;
பொய்க் கூத்தாடின் கலகம் அது!
ஆமென்.

Image may contain: text

நாள் பார்த்தல்!

நாள் பார்த்தல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:6-7.
6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்ய நாள் பார்க்காதீர்;
நாட்கள் யாவும் நல்லவையே.
இன்பம் பெருக இன்றே செய்வீர்;
இறைவன் தருவார் வல்லமையே.
பன்மை மக்கள் வாழும் நாட்டில்,
பலரது கருத்து வேற்றுமையே.
தன்மை புரிந்து நன்மை செய்வீர்;
தலைக்கனம் தராது ஒற்றுமையே!
ஆமென்.

Image may contain: text

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!

மணத்தின் அருமை பிணத்தில் தெரியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:3-5.
3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமேதவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டும்,
உதவாதிருத்தல் பெருங்கேடு.
பணம் பொருள் நிறைந்த வீடானாலும்,
பசியாற்றலையேல் சுடுகாடு.
குணம் என்று சொன்னால் கிறித்து போலாம்,
கொடுப்பதின் இன்பம் நீ தேடு.
மணத்தின் அருமை, பிணத்தில் தெரியும்!
மகனே, மகளே, இரங்கிவிடு!
ஆமென்.

Image may contain: 1 person, sitting and text

அன்பைப் பகிர்வதே வாழ்க்கை!

அன்பைப் பகிர்வதே வாழ்க்கை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:1-2.
1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டம் போட்டுச் சடங்குகள் செய்வார்;
சாகா வழியெனச் சாக்குரைப்பார்.
திட்டம் போட்டுத் தீமையும் செய்வார்;
தெய்வ விருப்பெனப் போக்குரைப்பார்.
முட்டாட்தனத்தைச் சட்டம் ஆக்க,
மும்மை தெய்வம் மனிதனில்லை.
கிட்டும் அன்பைப் பகிர்வது வாழ்க்கை;
கேளாவிட்டால், இனிமையில்லை!
ஆமென்.

Image may contain: text

அழிப்பது எதற்கு?

அழித்துப் பெறுவதே ஆசி என்றால்,
அரசிற்கும் நாட்டிற்கும் தேவையில்லை.
விழிப்புணர்வுள்ள மக்கள் என்றால்,
விலைக்கு இயற்கை போவதில்லை!

-கெர்சோம் செல்லையா.

About This Website

எது புதுமை?

எது புதுமை?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:36-39.
36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38 புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
ஒன்று இன்று வேறொன்றாகும்
உருமாற்றத்தைப் புதுமை என்பார்.
என்றுமெங்கும் இல்லா ஒன்றை
இறைவன் தந்தால் என்னென்பார்?
பன்றி புரளும் அழுக்காயிருந்தும்,
படைத்தவர் தூய்மை ஆக்குகிறார்.
இன்று இதுதான் புதுமை என்பேன்.
இழிஞரும் புனிதர் ஆகின்றார்.
ஆமென்.

Image may contain: text
LikeShow More Reactions

உள்ளம் ஒடுக்கா நோன்பு!

உள்ளம் ஒடுக்கா நோன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:33-35.
33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
உடலை ஒடுக்கிப் புசியாதிருந்தால்,
உங்கள் ஆன்மா அடங்கிடுமோ?
குடலை வருத்திப் பசியாயிருந்தால்,
குறை, குற்றங்கள் முடங்கிடுமோ?
கடவுள் அன்பைப் பகிரவென்றால்,
கடுமை நோன்பும் முறையாகும்.
விடுதலைதரும் நம் இயேசு இருக்க,
விலைக்குக் கேட்டால், குறையாகும்!
ஆமென்.

Image may contain: shoes
LikeShow More Reactions

Comment

சொந்த உறவாய்ச் சேர்ப்போம்!

சொந்த உறவாய்ச் சேர்ப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:29-32.
29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
எந்தன் நேர்மை உயர்வென எண்ணி,
எளியரைப் பார்க்க வெறுத்திட்டேன்.
உந்தன் தூய்மை முன்னர் நிற்க,
ஒருவரும் இல்லை மறந்திட்டேன்.
மைந்தன் வந்து உரைத்ததினாலே,
மனிதத் தன்மை புரிந்திட்டேன்.
சொந்த உறவாய்ச் சேர்த்துக்கொண்டு,
செயலில் உம்மை அறிவிப்பேன்!
ஆமென்.

Image may contain: 1 person, text
LikeShow More Reactions

லேவியும், பாவியும்!

லேவியும், பாவியும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:27-28.
27 இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28 அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

கிறித்துவில் வாழ்வு:
ஆயத்துறையின் வருவாய் விட்டு,
அடைந்த சொத்தையும் துறந்து விட்டு,
மாயம் என்று யாவையும் விட்டு,
மைந்தனுக்காகவே வருகிறார், லேவி!
சாயம் பூசி ஊழியம் செய்து,
சாதிப்பதுவாய் விளம்பரம் செய்து,
வாயில் மட்டுமே நன்மை செய்து,
வாழ்வையே இழக்கிறார், பாவி!
ஆமென்.

யாருக்குப் புகழ்ச்சி?

யாருக்குப் புகழ்ச்சி?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:24-26.

24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
தம்மை அனுப்பிய தந்தை மகிழத்
தரணியில் இயேசு வாழ்ந்தாரே.
நம்மை அனுப்பும் மைந்தன் மகிழ,
நன்மை செய்து வாழ்ந்தோமா?
உம்மை ஒருவர் இப்படிக் கேட்பின்,
உமது வாழ்க்கை என் சொல்லும்?
செம்மை இல்லை என்பதனாலே,
சீர்பட இயேசு முன் நில்லும்!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions