நாள்தோறும் நற்செய்தி 

<February 2012>
SuMoTuWeThFrSa
2930311234
567891011
12131415161718
19202122232425
26272829123
45678910
 



  
 
மெய் இன்று 
 
   
Thursday, February 23, 2012

கிறிஸ்துவின் அடியாரே வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தி :  யோவான்  10: 39 – 42
பழைய மொழி பெயர்ப்பு பொது மொழி பெயர்ப்பு
இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்க தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, 

யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக் கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.

அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.

அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார்.

பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், ' யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று ' எனப் பேசிக்கொண்டனர்.

அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
எண்ணமும் இறைவேண்டலும்
அற்புதம் செய்தலே ஊழியமென்று
அடிக்கடி எண்ணிக் கொள்பவரே,
அடியார் யோவான் அருட்பணி பாரும்,
அறிவின் குறையைத் தீர்ப்பீரே!
நற்பலன் விளைய நம்மை எருவாய்
நல்குதல் தாமே ஊழியமே!
நம் தமிழ்நாடும் இயேசுவை அறிய
நன்மையைப் பணியாய்ச் செய்வோமே!
ஆமென்.
 


 

 

 
     
   

 

 


  Author  : GERSHOM CHELLIAH
Copyright ©2009 thetruthintamil.com
+91-44-2565 5000