மழையும் பிழையும்!

மழையே, நீ பெய்தாய் என்பது பிழையே!
மயாட்டில் நீர் வந்ததும் கற்பனையே!
வழக்கே, முடித்து விட்டோம் உனையே- இனி
வருந்துவதால் பயன் இலையே!
-கெர்சோம் செல்லையா.

முடியாதெனத் தடுக்கும் மலை

முடியாதெனத் தடுக்கும் மலையை…..
நற்செய்தி மாலை: மாற்கு 6: 50-52.
“ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘ துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் ‘ என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.”

நற்செய்தி மலர்:
அடியார் என்றே நாமிருந்தாலும்,
அடிக்கடி மறந்து அஞ்சுகிறோம்.
இடியாய்த் துன்பம் எதிர்க்கும் நாளில்,
இடிந்து போய் நாம் கெஞ்சுகிறோம்!
துடியாய்த் துடிப்பதை நிறுத்திவிட்டு,
தெய்வம் சொல்வதைக் கேட்டிடுவோம்.
முடியாதெனத் தடுக்கும் மலையை,
மும்மை இறையால் ஓட்டிடுவோம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

வாக்களிக்க வாருங்கள்!

வாருங்கள், வாக்காலே வாழ்வமைப்போம்!

கோடம்பாக்க ஆட்சிகட்கு முடிவு எப்போது?
கேடுகெட்ட தமிழருக்கும் விடிவு எப்போது?
ஆடு மாடு என்றலையும் கூட்டம் இப்போது,
ஓடு போன்று தேயுமுன்னே, காட்டும் தப்பாது!
-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

தேர்தலும் நம் தேர்வும்!

திருமறையின்படி நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள் அல்லது தலைவர்கள் எப்படி இருக்கவேண்டும்?

இறைவாக்கினன் தேர்தலும் நம் தேர்வும்!மோசேயால், கி.மு. 1410 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட உபாகமம் 17:14-20 – ஐ வாசித்து, நாமும் நம்மை ஆள, நமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வோம்.
1. நாம் தேர்ந்தெடுக்கும் நமது ஆட்சியாளர்கள், நல்லிறைவனால் தேர்வு பெறுபவர்கள்தானா என்று முதற்கண் எண்ணிப் பார்ப்போம். (18:15).
2. நம்மை ஆள வருபவர் நம் நாட்டைச் சார்ந்தவர்தானா? அயலவரைத் தேர்வு செய்யக் கூடாது என்று ஆண்டவரின் வாக்கு தெளிவாய் உரைக்கிறது. (18:15).
3. குற்றப் பின்னணியில் உள்ளவர்களைச் சேர்க்காதவர்கள், (அந்த நாள் கணக்கின்படி சண்டைக் குதிரைகள்.18:16), வேறு மனைவியரை-வேறு கணவரைத் தேடாதவர்கள் (18:17), மிகுதியாய்ச் சொத்து சேர்க்காதவர்கள்- அதாவது ஊழல் புரியாதவர்கள் (18:17) என்று பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.
4. நற்பண்புடன் வாழ நாள்தோறும் இறைவாக்கை வாசிப்பவராய், நமது தலைவர் இருக்கவேண்டும்(17:18-20).

இப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கவும், தேர்வுபெறவும், இறைவேண்டல் ஏறெடுப்போம்!
-கெர்சோம் செல்லையா.


Click here to Reply, Reply to all or Forw

சிறை பிடிப்போம்!

மற்றவரும் மனிதரென
மதிக்கும் நல்லறிவை,
கற்றவராய் புகட்டாது,
காலங்களை உடைத்தோம்.
பெற்றவராய் இனி திருந்தி,
பிள்ளைபோல் நடப்போம்.
சுற்றியுள்ள சிறைகளிலே
சாதிகளை அடைப்போம்!
-கெர்சோம் செல்லையா.

மற்றவரும் மனிதர்களே!

மற்றவரும் மனிதரென
மதிக்கும் நல்லறிவை,
கற்றவராய் புகட்டாது,
காலங்களை உடைத்தோம்.
பெற்றவராய் இனி திருந்தி,
பிள்ளைபோல் நடப்போம்.
சுற்றியுள்ள சிறைகளிலே
சாதிகளை அடைப்போம்!
-கெர்சோம் செல்லையா.

படைத்தவர் தெளிவு தருகின்றார்!

படைத்தவர் தெளிவு தருகின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.
“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கடல் மேல் நடந்து காத்திட விரைந்த
கடவுளின் மகனையே பேய் என்றார்!
உடல் பொருள் ஆவி ஒடுக்கி உழைத்த
ஊழியர்கூட இதைச் சொன்னார்!
இடம் பொருள் ஏவல் தெரியாததனால்
இப்படி மனிதர் தவறுகின்றார்.
படம் போல் பார்க்கும் அறிவைக் கேட்போம்;
படைத்தவர் தெளிவைத் தருகின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பதற்றத்தில் பேசவேண்டாம்!

பதற்றத்தில் பேசாதீர்!

நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.

“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் நடந்திடவும்,
ஆண்டவர்க்குத்  தெரியும்.
அறியாத மானிடர்க்கோ,
அதுமாறிப் புரியும்.
பாழ் உலகில் அதிசயங்கள் 
படைத்தவரின் மிச்சம்.
பதற்றத்தில் பேசாதீர்;
பரவி விடும் அச்சம்!
ஆமென்.

தனிமை வேண்டல்!

தனித்தும் கேட்போம்!
நற்செய்தி மாலை : மாற்கு: 6:45-47.
“இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.”
நற்செய்தி மலர்:
இருவர் மூவர் இணைந்து வேண்ட,
இறைவன் அங்கே வந்திடுவார்.
ஒருவர் தனித்து வேண்டினாலும்,
உள்ளில் அமர்ந்து தந்திடுவார்.
திருடர் வருதல் போல இயேசு
தெரியா நேரம் இறங்கிடுவார்.
அருளர் அணியில் நாமும் சேர,
அவரைக் கேட்போம், இரங்கிடுவார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

அனைவருக்குணவு நீர் தாரும்!

 

அனைவருக்குணவு நீர் தாரும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:41-44
“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.”
நற்செய்தி மலர்:
மண்ணாகிப் போன திட்டங்களாலே,
மனிதர் பட்டினி கிடக்கின்றார்.
உண்ணாது அலையும் ஏழையருக்கு,
உதவார் கதவை அடைக்கின்றார்.
எண்ணாது இவரை இப்படிவிட்டால்,
இந்தியா எப்படி முன்னேறும்?
அண்ணாந்து பார்த்து போற்றிய மகனே,
அனைவருக்குணவு நீர் தாரும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.